பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையடிவாரத்தில் போகர் சித்தரின் சீடரான புலிபாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் அமைந்துள்ளது.
இங்கிருந்து, இன்று காலை, உலக நலனுக்காக, ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிபாணி பத்ர சுவாமிகள் தலைமையில், தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் முன்னிலையில், ஜப்பானைச் சேர்ந்த 100 பக்தர்கள், பாரம்பரிய தமிழ் உடை மற்றும் சேலை அணிந்து, மேளம் மற்றும் தாள வாத்தியங்களுடன், திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோவிலுக்கு பால் குடங்களை எடுத்துச் சென்றனர்.

அங்கு, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதைத் தொடர்ந்து, படிகள் வழியாக பழனி மலை கோயிலுக்குச் சென்று, தண்டாயுதபாணி சுவாமி மற்றும் போகர் ஜீவ சமாதியில் வழிபாடு செய்தனர்.
பின்னர், அடிவாரத்தை அடைந்து புலிபாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.