தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதியில், பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தென்னை மரங்களை சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சி தாக்கி இலைச்சாற்றினை உறிஞ்சி இலைகளின் மேல் கரும்பூசணம் போல் படர்ந்து இலைகள் மற்றும் மட்டைகளை காய்ந்துவிடச் செய்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்த சுருள் வெள்ளை ஈக்களை அழிப்பதற்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ள மற்றும் தேவையுள்ள விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான கணினி சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகலுடன், பேராவூரணி ஒன்றியம், நாட்டாணிக்கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை இயக்குநர் வள்ளியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.