நவீன் குமார், விஜய்ஸ்ரீ ஜி கனடாவின் டொராண்டோவில் வசிக்கும் ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே. சாய், ‘பிரைன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ ஆகிய 2 படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கிறார். ‘பிரைன்’ படத்தை விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார்.
அவர் ‘தாதா 87’, ‘பவுடர்’ மற்றும் ‘ஹரா’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். ‘ஷாம் தூம்’ படத்தை நவீன் குமார் இயக்குகிறார். சாய் ஆகஸ்ட் 12 அன்று தனது பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆர்.ஜே. சாய் இன்டர்நேஷனல் என்ற பதாகையின் கீழ் இந்தப் படங்களைத் தயாரிக்கும் ஆர்.ஜே. சாய், ‘ஷாம் தூம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

ஆர்.ஜே. சாய் இது குறித்து அவர் கூறுகையில், “நான் கனடாவில் வசித்தாலும் தமிழ்த் திரையுலகில் ஒரு முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்தப் படங்கள் மூலம் எனது பயணத்தைத் தொடங்குகிறேன்.
எனது நிறுவனம் சிறந்த கதைகள் மற்றும் திறமையான இளைஞர்களைக் கொண்ட படங்களை விளம்பரப்படுத்தும். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படங்களில் பணியாற்றுவார்கள்.”