சென்னை: குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க சித்தர்கள் காட்டியுள்ள இயற்கை வழிமுறைதான் கோமதி சக்கரம். இதை குழந்தைகள் தூங்கும் சமயத்தில் ஒரு மணி நேரம் நெற்றிப்பொட்டில் மத்தியில் வைத்தவாறு இருக்கவேண்டும். இதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
குழந்தையுடைய ஞாபக சக்தி திறன் மிகவும் குறைவாக இருக்கும் அல்லது படிப்பில் அதிக கவனம் இல்லாமல் இருக்கும். சில குழந்தைகளின் குறும்பு மிக அதிகமாக இருக்கும். சமாளிக்கவே முடியாது.
சில குழந்தைகள் எல்லாம் அடக்கி ஒரு இடத்தில் உட்கார வைத்து படிக்க வைக்க கூட முடியாத ஒன்றாக இருக்கும். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அந்த காலத்திலேயே சித்தர்கள் ஒரு வழியை கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். குழந்தைகள் தூங்கும் சமயத்தில் ஒரு மணி நேரம் நெற்றிப்பொட்டில் மத்தியில் கோமதி சக்கரத்தை வைத்தவாறு இருக்கவேண்டும்.
இப்படி தினம்தோறும் செய்து வரலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் கூட நல்ல பலனைத் தரும். கோமதி சக்கரத்தின் சுழல் வடிவம், குழந்தைகளின் மூளை, செயல்படும் தன்மையை சீர்ப்படுத்த முடியும் என்று கூறுகிறது சித்தர்களின் வாக்கு.
சில குழந்தைகளுக்கு இருக்கும் அதிவேக திறனை கட்டுப்படுத்தவும், மந்தமான திறமையை தூண்டவும் இந்த கோமதி சக்கரமானது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு இயற்கையான பொருள். இதை குழந்தைகளது நெற்றிப்பொட்டில் வைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இதன் மூலம் மூளையின் ஞாபக சக்தி திறன் அதிகரிக்கப்பட்டு, படித்தது அனைத்தும் மறக்காமல் இருந்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும்.