திண்டுக்கல்: வத்தலக்குண்டில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவாதன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது பேச்சை கவனிக்காமல் தொண்டர்கள் பிரியாணி சாப்பிட சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், கூட்டத்தின் போது ஒன்றிய நிர்வாகியின் பெயரை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் வாசிக்காமல் விட்டதால், அந்த நிர்வாகி மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சி தற்காலிக பரபரப்பை சந்தித்தது.
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு மேற்கு, கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பல அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் தற்போது திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பேசுபொருளாகி வருகிறது.