இன்றைய நவீன உலகில் பணம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. பணத்தைச் சம்பாதிக்கப் பலர் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் அவர்களிடம் பணம் தங்குவதில்லை. வீட்டில் பணம் தங்குவது என்பது கடவுளின் அனுக்கிரகமாகக் கருதப்படுகிறது. முதலில் சிறிய நாணயங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இது லட்சுமியின் அனுக்கிரகத்தைப் பெற உதவும் எனக் கூறப்படுகிறது. பூஜையறையில் சங்கு ஒன்றையும் வைத்துக் கொள்ளலாம். கடலில் கிடைக்கும் சங்கு லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது. இருப்பினும், இந்த பொருட்களை வைத்திருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் கவனமாக இருங்கள். மேலும் வீட்டில் அரிசி குறைவின்றி இருக்க வேண்டும்.
பூஜையறையிலும் சிறிதளவு அரிசியில் சிறிய அன்னப்பூரணி சிலையையும் வைக்கலாம். இந்த விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சிறிது நாட்களில் வீட்டில் பண வரவு பெருகுவதை நீங்கள் எளிதாகக் காண முடியும். பண வரவு அதிகரிப்பதுடன், தேவையற்ற செலவுகள் நீங்கி, உங்களிடம் சேமிப்பும் இருக்கும். எவ்வளவு செலவுகள் ஏற்பட்டாலும் பணத்துக்குப் பஞ்சம் வராது.