குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருளாக இருப்பது தான் பிரைட் ரைஸ் உள்ளிட்ட வெரைட்டி ரைஸ் வகைகள் . தக்காளி சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், முட்டை சாதம் உள்ளிட்ட பல்வேறு வெரைட்டி ரைஸ் வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும் பழசாதம் சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா. ஏராளமான சத்துக்களோடு, பார்க்க கலர்புல்லாக இருக்கும் ப்ரூட் ரைஸ் சமைப்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் .
பாசுமதி அரிசி ஒரு கப், நெய் -4 டீ ஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் 2 pcs, பிரியாணி மசாலா ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன், நறுக்கிய பைனாப்பின் நறுக்கிய ஆப்பின், திராட்சைப்பழம் (சேர்த்து) ஒரு கப் புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எடுத்து கொள்ளவும். அரிசியை கால் மணி நேரம் ஊறவிட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து அதில் நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய் தாளித்து புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய பழங்களை சேர்த்து, சாதத்தையும் போட்டுக் கிளறி அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கினால் சுவையான பழசாதம் ரெடி ஆகி விடும்.