By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மக்காச்சோளத்தை தாக்கும் புதுவகை படைப்புழு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > மக்காச்சோளத்தை தாக்கும் புதுவகை படைப்புழு
விவசாயம்

மக்காச்சோளத்தை தாக்கும் புதுவகை படைப்புழு

Nagaraj
Last updated: August 27, 2025 6:03 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பயிர்களை தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதலை உண்டாக்குவதுண்டு. அவை காற்றின் மூலமாகவோ, விதை தானியம், கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிகமாக மகசூலை பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது பால் ஆர்மிவார்ம் என்ற புது வகை படைப்புழுவாகும். அமெரிக்காவை தாயமாகக் கொண்ட இந்த பால் ஆர்மிவார்ம் என்ற படைப்புழுவானது முதன்முதலாக அதன் தாயகத்தை தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2016 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது. தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்காச்சோளத்தில் இதன் தாக்குதல் கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா கடலை. கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு தக்காளி, சிறுதானிய பயிர்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கி சேதத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

பெண் அந்து பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளின் அடிப்புறத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த பெண் அந்து பூச்சி தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது. முட்டை பருவமானது இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.

புழு பருவமானது ஆறு நிலைகளைக் கொண்டது. இளம் புழுவானது பச்சை நிறத்தில் கருப்பு நிற தலையுடன் காணப்படும். நன்கு வளர்ந்த புழுவின் தலையானது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் முகப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஆங்கில எழுத்து ஒய் –ஐ திருப்பி போட்டது போன்று அடையாளம் காணப்படும். புழுவின் வால் பகுதியில் நான்கு புள்ளிகளுடன் சதுரம் போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும் முதிர்ந்த புழுவானது 3 முதல் 4 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.

படைப்புழுவானது பின்பு இரண்டு முதல் 8 சென்டிமீட்டர் ஆழத்திற்கு மண்ணிற்குள் சென்று கூட்டு புழுவாக மாறிவிடும். கோடைகாலங்களில் கூட்டுப் புழு பருவமானது 8 முதல் 9 நாட்களும் குளிர்காலங்களில் 20 முதல் 30 நாட்களும் ஆகும்.

அந்து பூச்சிகள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. வளர்ந்த அந்து பூச்சியின் வாழ்நாள் சராசரியாக 10 நாட்கள் ஆகும். தட்பவெப்ப நிலை சராசரியாக 28 செல்சியஸ் இருக்கும் பொழுது இந்த படைப்புழுவின் மொத்த வாழ்நாளானது 30 முதல் 40 நாட்கள் ஆகும். குளிர்காலங்களில் 60 முதல் 90 நாட்கள் வரை இதன் வாழ்நாள் நீடிக்கும்.

இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகளில் பச்சையமில்லாமல் வெண்மையாக காணப்படும். 3 முதல் 6ம் நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று கடித்து உண்டு பாதிப்பை உண்டாக்கும். அதனால் இலைகள் விரியும் பொழுது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும். 20 முதல் 40 நாட்கள் உடைய இளம் பயிரையே இவை அதிகமாக தாக்கும்.

You Might Also Like

ஜூனியர் என்.டி.ஆரை பார்க்க குவிந்த ரசிகர்களால் சேதமடைந்த மருத்துவமனை

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்

பொள்ளாச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு

பெண்ணை கொடூரமாக தீ வைத்து கொளுத்திய காதலன் கைது

டிட்வா புயல் பாதிப்புக்கு நிதிஉதவி… பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

TAGGED:caterpillarsDamageleavessmall holesyoung larvaeஇலைகள்இளம்புழுக்கள்சிறு துளைகள்சேதம்படைப்புழுபாதிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?