திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய வடக்கு மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளது கண்ணூர் மாவட்டம்.

இந்த சூழ்நிலையில், இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால், திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இரவு முதல் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.