லக்னோ: உ.பி.,யில் பெய்து வரும் கனமழையால், தலைநகர் லக்னோவில் உள்ள சட்டசபைக்குள் மழைநீர் புகுந்தது. உத்தரபிரதேச மாநிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (31.07.2024) தலைநகர் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
இதில், மாநிலங்களவை, விதானசவுதா கட்டடத்திற்குள் மழைநீர் புகுந்தது. கட்டிடத்தின் நுழைவாயில், நடைபாதை மற்றும் சில அறைகளில் தரை தளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அதேசமயம், சட்டசபை கூட்டத் தொடரில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ஒருவர் சட்டசபைக்குள் மழைநீரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்தார்.