சென்னை: போஜ்புரி நடிகர் பவன் சிங் சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி ராகவை அவமரியாதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் நடிகையின் இடுப்பை மீண்டும் மீண்டும் தொட்டதால் ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். அப்போது அஞ்சலி அதிர்ச்சி அடைந்தாலும், மேடையில் இருந்ததால் தன்னைக் கட்டுப்படுத்தினார். பின்னர் பவன் சிங் கடும் விமர்சனங்களை சந்தித்ததோடு, மன்னிப்பும் கேட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு நடிகை அஞ்சலி மனவேதனையில் சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், பவன் சிங்கின் இரண்டாவது மனைவி சமூக வலைதளத்தில் அவர் தன்னை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். இதனால் பவன் சிங்கைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்தன.
இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 23 வயது இளம் பெண் ஒருவர் பவன் சிங்கிற்கு “ஐ லவ் யூ” என்று மேடையில் கத்தினார். அதற்கு உடனே பவன் சிங்கும் “ஐ லவ் யூ டூ” என்று பதிலளித்தார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக பலர் அதிர்ச்சி அடைந்ததோடு, சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகப் பதிவு செய்து, அந்த இளம் பெண்ணை “புது அண்ணி” என்று கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே விமர்சனத்தில் சிக்கிய பவன் சிங் மீண்டும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இதனால் அவரைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் இன்னும் வலுவடைந்துள்ளன.