சென்னை: வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 200க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பம் குடும்பமாக பாதிக்கப்படுகின்றனர். புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. எனினும் பலர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ளவர்களின் ‘புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு’க்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” என்றார். என்று கூறுகிறது.