டெல்லி: கைலாஷ் மானசரோவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்ல சீன அரசாங்கத்தின் அனுமதி முக்கியமானது. லடாக் எல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் காரணமாக இந்த யாத்திரை 2020-ல் நிறுத்தப்பட்டது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இது இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. உத்தரகண்டின் லிபுலேக் கணவாய், சிக்கிமின் நாது லா கணவாய் மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய 3 வழிகள் வழியாக மானசரோவரை அடையலாம். இந்த ஆண்டு யாத்ரீகர் சென்றவர்களில் பலர் காத்மாண்டு வழியாகச் சென்றனர்.

நேபாள கலவரம் காரணமாக, யாத்ரீகர்கள் காத்மாண்டு வழியாக வீடு திரும்ப முடியவில்லை. திபெத் மற்றும் சீனாவில் உள்ள இந்தியர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா கூறியிருந்தது.
மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் இந்தியா திரும்ப சீன மற்றும் திபெத்திய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். திபெத்திய மற்றும் சீன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.