சென்னை: நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மற்றும் குறிப்பாக எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் லெப்டோஸ்பைரா என்ற சுழல் வடிவ நுண்ணுயிரிகளால் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். குஜராத், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அந்தமான்-நிகோபார் ஆகிய மாநிலங்களில் லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த வகை தொற்றுநோயை உறுதிப்படுத்த RTPCR சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. 2021ல் 1,046 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 2022ல் 2,612 பேருக்கும், கடந்த ஆண்டு 3,002 பேருக்கும். இந்த ஆண்டில் இதுவரை 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.