நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுநேர அரசியலுக்கு வரவிருக்கும் விஜய், தளபதி 69 தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் ரூ. 598 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் லியோ பெற்றுள்ளது.
லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் இயல். குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை இயல், சூர்யாவுடன் தனது தாய் மற்றும் இரட்டை சகோதரருடன் இணைந்து படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடித்த நடிகை இயல் எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.