வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகம் முழுவதும் பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.
உலகளாவிய தலைவர்களின் முக்கிய முடிவுகளை கண்காணிக்கும் உலகளாவிய முடிவு நுண்ணறிவு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் சமீபத்திய தரவரிசைகளை வெளியிட்டது. ஜூலை 8-14 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் படி, பிரதமர் மோடி 69 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடித்தார், மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 63 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட், உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் முதல் 10 தலைவர்களில் பிரதமர் மோடி 69 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி 75 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பத்து தரவரிசை தலைவர்களின் விவரங்கள்:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (69 சதவீதம்)
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (63 சதவீதம்)
அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே (60 சதவீதம்)
சுவிட்சர்லாந்து ஃபெடரல் கவுன்சிலர் வயோலா அம்ஹெர்ட் (52 சதவீதம்)
அயர்லாந்தின் சைமன் ஹாரிஸ் (47 சதவீதம்)
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (45 சதவீதம்)
போலந்தின் டொனால்ட் டஸ்க் (45 சதவீதம்)
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (42 சதவீதம்)
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (40 சதவீதம்)
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (40 சதவீதம்)