சில நாட்களுக்கு முன்பு, முன்னணி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவரது மனைவி அவரது இறுதி ஊர்வலத்தில் நடனமாடியது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அப்பா, நீங்க எங்களை விட்டுப் பிரிந்து 3 நாட்கள் ஆகிறது. நீங்க எங்களை ரொம்ப சிரிக்க வச்சீங்க, இப்போ ரொம்ப அழ வைக்குறீங்க. இந்த மூணு நாளா எனக்கு உலகமே தெரியல.

நீங்க இல்லாம குடும்பத்தை எப்படி சுமக்க போறோம்னு தெரியல. ஆனா நீங்க சொன்ன மாதிரி, நான் கண்டிப்பா பலசாலியா இருப்பேன் அப்பா. தம்பி, இந்த மூணு நாளா உங்களை நிறைய தேடிட்டு இருக்கான் அப்பா. நீங்க உங்க நண்பர்கள், சகோதரர்களோட சந்தோஷமா இருப்பீங்கனு எனக்கு தெரியும். நீங்க சொன்ன மாதிரி, விமர்சனத்துக்கு பயப்பட மாட்டேன் அப்பா.
உங்க பெயரை நான் கண்டிப்பா பாதுகாப்பேன். அப்பா, உங்களை பெருமையா உணர வைப்பேன். அப்பா, உங்களை ரொம்ப நேசிக்கிறேன், மிஸ் பண்றேன். இது உங்களுக்கும் எனக்கும் ரொம்பப் பிடிச்ச புகைப்படம். எல்லாரும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து, நீங்க உங்க அப்பாவோட ஜெராக்ஸ்னு சொல்லுவாங்க. நான் எப்பவும் உங்களைப் போலவே இருப்பேன் அப்பா,” என்றார் இந்திரஜா சங்கர்.