சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் அவசர பயணமாக டெல்லி சென்றுவிட்டு மாலையில் சென்னை திரும்பினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீர் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
அவருடன் அவரது செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் சென்றனர். நேற்று காலை 6 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணமாக புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் அவர் சொந்த பயணமாக டெல்லி சென்று நேற்று மாலை சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.