காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பழங்கள் உடலுக்கு அதிக ஆற்றல் அளிப்பதோடு, செரிமானத்தை சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. பல பழங்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட பழங்கள் மட்டுமே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றவை என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துவதோடு, நாளை முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றன.

தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்ட பழமாகும். காலை நேரத்தில் இதனை சாப்பிடுவது உடலில் நீர் குறைவதை சரிசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அதேபோல் பப்பாளி செரிமானத்தை எளிதாக்கும் தன்மையைக் கொண்டது. இதில் உள்ள பப்பேன் எனும் நொதி, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பப்பாளி ஒரு சிறந்த தேர்வாகும்.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு நிறைந்து காணப்படுகிறது. இது வீக்கத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. பெர்ரிகள் போன்ற பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்ததால், இரத்த அழுத்தத்தை சீராக்கி, காலை நேர ஆற்றலை அதிகரிக்கிறது.
ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதோடு, சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. இப்பழங்களை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால், உடல்நலம் உறுதிப்படுத்தப்பட்டு, நாளை முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். ஆகவே தினமும் இந்த ஆரோக்கியமான பழங்களை காலை பழக்கமாக மாற்றிக் கொள்வது நல்லது.