சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வெடிகுண்டு வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த மாதம் 5ஆம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைச் சம்பவம் தொடர்பாக துப்பு தேடினர்.
இதில் முதற்கட்டமாக ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட பிரபல ஆற்காடு ரவுடி சுரேஷின் தம்பி பொன்னை பாலு, உடந்தையாக இருந்த திருவேங்கடம் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர காவல்துறை நடத்திய என்கவுண்டரில் திருவேங்கடம் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டாலும், கொலைக்கான மூளையாக, கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், அயனாவரத்தில் ஒன்றரை வயது மகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங் மனைவி மலர்க்கொடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் மகளைக் கடத்திச் சென்று மொத்தக் குடும்பத்தையும் வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவேன் என்று சதீஷ் பெயரில் மிரட்டல் கடிதம் உள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை.