சென்னை: விஜய்யை குற்றவாளியாக்க நினைப்பது அரசியல் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் விஷயத்தை பொருத்தவரை விஜய் மீது வழக்கு போட்டு அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற பொழுது கேசே நிற்காது.. கொஞ்சமாவது சட்டம் தெரிந்து இருந்த யாராவது கூட இதைப்பற்றி சொல்லுவார்கள்.. ஹைட்ரபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுன் உபகாரத்தை எடுத்துக் கொள்ளலாம், அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம் ஒரு இரவு சிறையில் வைக்கலாம்.
அடுத்த நாள் வெளியில் வந்து விடுவார்கள்.. இன்று அரசு உறுதியாக இருக்கிறார்கள் என்றால் யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் ஆரம்பித்து, தமிழக வெற்றி கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் யாராவது இருந்தாலும் கூட, தவறு செய்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். தமிழக வெற்றி கழகத்தின் மீது தவறுகள் இருக்கிறதா என்று என்னை கேட்டால் நிச்சயம் இருக்கிறது.
ஆனால் விஜய்யை குற்றவாளியாக மாற்ற நினைத்தால் அது முடியவே முடியாது. அரசியலுக்காக சிலர் இதை பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அதே போல திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர். நாளை திருமாவளவன் கட்சியில் இதேபோன்று நடந்திருந்தாலும், நான் திருமாவளவனுக்காக பேசுவேன். இதை யார் ஏற்பாடு செய்தார்களோ அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் கட்சியில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறுவதை அவர் கண் கூடாக பார்க்கிறார்.
அந்த எரிச்சலில் தான் திருமாவளவன் வெளியே வந்து திடீரென்று விஜய், மத்திய அரசு பத்தி பேசிக் கொண்டு இருக்கிறார். இரண்டாவது, பா.ஜ.க தமிழக வெற்றி கழகத்தையோ கட்சியையோ பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை. நியாயத்தை நியாயமாக பேசிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியால் நசுக்கப்படும் பொழுது நாங்கள் நிச்சயம் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வோம். தமிழக வெற்றி கழகத்தை இந்த விஷயத்தில் நசுக்க பார்ப்பதால் மட்டுமே நாங்கள் இதை பதிவு செய்கிறோம்.
அதனால் மட்டுமே நாங்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் அடைக்கலம் கொடுக்கிறோம் உடன் நிற்கிறோம். இவர்கள் போட்டு இருக்கும் எஃப் ஐ ஆர் மீதே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய ஒருவர் ஜென்சி ரெவல்யூசன் பற்றி பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று தி.மு.க எப்படி ? சொல்ல உரிமை இருக்கிறது.
அரசு தான் தமிழக வெற்றி கழகத்தினர் மீது எஃப் ஐ ஆர் பதிந்து இருக்கிறது. நீங்கள் பதிந்த எஃப் ஐ ஆர் மீதே நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களை கைகாட்டி நாங்கள் அடைக்கலம் கொடுப்பதாக கூறுவது அபத்தமானது என்று கூறினார்.