சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்தது. இதற்கிடையே, டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான நீர் தேவை குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் வினாடிக்கு 15,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கால்வாய் பாசனத்திற்காக நீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக தொடர்கிறது. இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 5,256 கன அடியில் இருந்து நேற்று 6,251 கன அடியாக அதிகரித்தது.
அணையின் நீர் இருப்பு 83.14 டி.எம்.சி.யாக இருந்தது.