சென்னை: முதல்வர் ஆலோசனை… வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.