புது டெல்லி: இந்தியா தனது UPI கட்டண முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து பிரான்சில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40% அதிகரித்துள்ளது என்று பிரெஞ்சு நிறுவனமான லைரா நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோஃப் மரியட் கூறினார்.
உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பேசிய அவர், “ஒரு வருடம் முன்பு, பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தில் இந்தியாவின் UPI ஐ அறிமுகப்படுத்தினோம். சில வாரங்களுக்கு முன்பு ஈபிள் கோபுரத்தின் பொது மேலாளரிடம் பேசினேன். அந்த நேரத்தில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்திருப்பதை அறிந்து அவர் ஆச்சரியப்பட்டார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது UPI போன்ற பாரம்பரிய டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
பிரான்சில் உள்ள பைசெஸ்டர் வில்லேஜ் ஷாப்பிங் சென்டரில் UPI வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கிறிஸ்டோஃப் மரியட் கூறினார்.