புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் கலவரமாக வெடித்ததால், தலைநகர் டாக்காவில் உள்ள பாராளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த வன்முறை கும்பல் சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவானது.அப்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது.
பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி பல்வேறு பிரிவினருக்கு 56% இடஒதுக்கீடும், பொதுப்பிரிவினருக்கு 44% இடஒதுக்கீடும் அமலில் இருந்தது.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிராக வங்கதேச கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டம் நடத்தத் தொடங்கினர். சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை ஜூலை 21ஆம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்தது. மேலும் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜூம்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.
சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் 14 காவலர்களைக் கொன்றனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகளும் தாக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவில் மற்றும் காளி கோவில்களும் தாக்கப்பட்டன.
ரங்பூர் மாநகராட்சியின் இரண்டு இந்து கவுன்சிலர்களான ஹரதன் ராய் மற்றும் கஜோல் ராய் ஆகியோர் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். ராய்கஞ்ச் பத்திரிகை கூடத்திற்குள் நுழைந்த வன்முறைக் கும்பல், பிரதீப் குமார் என்ற பத்திரிகையாளரைக் கொடூரமாகக் கொன்றது. இந்நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலை உடைக்கப்பட்டது. போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் நேற்று டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் வன்முறை கும்பல் நுழைந்தது. டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். அமைதியின்மை அதிகரித்ததால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது குடும்பத்தினருடன் டாக்காவிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு வங்கதேச விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கிருந்து சி-130 விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். முன்னதாக, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற ராணுவத்திடம் அனுமதி கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கையை ராணுவ தலைமை நிராகரித்தது. இந்த பரபரப்பான சூழலில், வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் அறிவித்தார். பங்களாதேஷின் முழுப் பொறுப்பையும் தாம் ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
“விரைவில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்கப்படும். 18 பேர் கொண்ட குழு ஆட்சி மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும். தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தீர்வு காண ஜனாதிபதி முகமது சகாபுதீனிடம் முறையிட்டுள்ளோம். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது. அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதற்கிடையில், ஷேக் ஹசீனாவின் போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் டாக்காவில் உள்ள வீடு மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த கலைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள், பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள் மற்றும் மீன்கள் இது தொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் பரவி வருகின்றன.
தலைநகர் டாக்காவில் நேற்று சுமார் 4 லட்சம் போராட்டக்காரர்கள் திரண்டனர். போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மக்கள் வீட்டிலேயே முடங்கினர். டாக்கா விமான நிலையம் மூடப்பட்டது. நாடு முழுவதும் 3,500 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்த நாட்டில் பல லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா (76) மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேற்று மாலை டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமானம் தரையிறங்கியது. ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வரவேற்றார். ஹசீனாவுடன் அவரது தங்கையான ஷேக் ரெகனாவும் வந்திருந்தார். ஹசீனாவின் மூத்த மகன் ஷாஜிப் வசத் ஜாய் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள பால்ஸ் சர்ச்சில் வசித்து வருகிறார். இளைய மகள் சைமா வசத், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநராக உள்ளார். தற்போது அவர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வங்கதேச நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கினார். பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மாளிகையில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று, வங்கதேச நிலவரம் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மூத்த கமாண்டர்கள் கொல்கத்தாவுக்குச் சென்று எல்லைப் பாதுகாப்பு நிலைமை குறித்து பிராந்திய தளபதிகளுடன் முக்கிய சந்திப்பை நடத்தினர். டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்

இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று, வங்கதேச நிலவரம் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மூத்த கமாண்டர்கள் கொல்கத்தாவுக்குச் சென்று எல்லைப் பாதுகாப்பு நிலைமை குறித்து பிராந்திய தளபதிகளுடன் முக்கிய சந்திப்பை நடத்தினர். டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.