வேலூர்: குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் தப்பியோடிய நிலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லேரியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி வருவதாக தகவல்கள் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சென்ற போலீசார், அவர் காவலாளியாக வேலை செய்து வரும் விவசாயத் தோட்டத்தில் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை அறிந்து கோட்டி தப்பிவிட்ட நிலையில், அவரது கூட்டாளியான மணி என்பவரைக் கைது செய்தனர்.