மதுரை: மதுரையில் 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகன் யுவ நவநீதன். துப்பாக்கி சுடு வீரரான யுவநவநீதன் சிறுவயதில் இருந்தே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து வெற்றிபெற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார்.
மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வந்த இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி, அதற்காக பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று யுவ நவநீதன் ஏர்கன்னை வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
போலீசாரின் விசாரணையில், மாணவன் யுவன் நவநீதன் படிக்காமல் இருந்ததால் படிக்கச் சொல்லி பெற்றோர் கூறியதால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.