திருமலை: கடந்த நான்கு நாட்களாக திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று காலை திருமலையின் இரண்டாவது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
9-வது கிலோமீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும், தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விழுந்த பாறைகளை அகற்றினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
இருப்பினும், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.