புதுடெல்லி: சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் “இந்தியாவில் சாலை விபத்துக்கள்” என்ற அறிக்கையை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 403. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 593. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 715 ஆகும். இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 279 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 18 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர’ 69 ஆயிரத்து 834 பேர் காயமடைந்துள்ளனர்
2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 4,56,959 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,58,984 பேர் உயிரிழந்துள்ளனர். 4,49,360 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தில் 62,685 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 18,129 பேர் உயிரிழந்துள்ளனர். 63,132 பேர் காயமடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தமிழகத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம். 2020ல் தேசிய அளவில் 3,72,181 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,38,383 பேர் உயிரிழந்துள்ளனர். 3,46,747 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 49,844 விபத்துகள் நடந்துள்ளன. 14,527 பேர் உயிரிழந்துள்ளனர். 47,618 பேர் காயமடைந்துள்ளனர். 2021ல் தேசிய அளவில் 4,12,432 விபத்துகள் நடந்துள்ளன.
இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 55,682 விபத்துகள் நடந்துள்ளன. 15,384 பேர் உயிரிழந்துள்ளனர். 55,996 பேர் காயமடைந்துள்ளனர்.
2022ல் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4,61,312. இறப்பு எண்ணிக்கை 1,68,491. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,43,366. தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 64,105. பலி எண்ணிக்கை 17,884. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 67703. நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம்/வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் மற்றும் நிபுணர்களின் சாலை பாதுகாப்பு தணிக்கை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஓடும் விபத்துகள் ஏற்பட்டால், இறப்புக்கான இழப்பீடு ரூ. 25,000 முதல் ரூ.2 லட்சமாகவும், கடுமையான காயங்களுக்கு இழப்பீடு ரூ.12,500 முதல் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது