இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் Narzo N61 என்ற புதிய பட்ஜெட் மொபைல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மொபைல் ஆகஸ்ட் 6 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய Narzo N61 மொபைலானது நிறுவனத்தின் பிரபல Narzo சீரிஸின் லேட்டஸ்ட் மாடல் ஆகும். இந்த சீரிஸின் கீழ் சமீபத்தில் Narzo N63 மற்றும் Narzo N65 ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிய மொபைலான Narzo N61 ஒரு இன்டகிரேடட் மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்குடன் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Realme Narzo N61 குறித்து வாருங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் Narzo N61 மொபைலின் விலை:
புதிய Realme Narzo N61 மொபைல் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டார்ஜ் மற்றும் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முறையே ரூ.7,499 மற்றும் ரூ.8,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரூ.500 தள்ளுபடி கூப்பனும் வழங்கப்பட்டு வருகிறது. அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வெப்சைட் மூலம் இந்த மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. Marble Black மற்றும் Voyage Blue உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
Narzo N61 மொபைலின் சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 4.0-ல் இயங்கும் இந்த மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட் , 180Hz வரை டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் 560nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.74-இன்ச் HD+ (1,600 x 720 பிக்சல்ஸ்) LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. இந்த மொபைல் ArmorShell ப்ரொட்டக்ஷன் மற்றும் TÜV ரைன்லேண்ட் ஹை-ரியலபிலிட்டி சான்றிதழுடன் வருகிறது. மேலும் இந்த மொபைலின் டிஸ்ப்ளே ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் டெக்னலாஜியை கொண்டுள்ளது. இந்த டெக்னலாஜி மூலம் கைகள் ஈரமாக இருந்தாலும் கூட மொபைலை சிரமமின்றி பயன்படுத்த முடியும். இந்த டிவைஸில் Unisoc T612 SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதிலிருக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன் மூலம் யூஸர்கள் இந்தரனால் ஸ்டோரேஜை 2TB வரையிலும் விரிவாக்கி கொள்ளலாம். Narzo N61 மொபைலின் பின்புறத்தில் 32MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு செகண்டரி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக முன்புறத்தில் 5MP செல்ஃபி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலானது கொலாப்ஸபில் மினி கேப்சூல் 2.0 அம்சத்தை கொண்டுள்ளது, இது யூஸர்களுக்கு விரிவான நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் அலெர்ட்ஸ்களை காட்டுகிறது.
Narzo N61 மொபைலில் கொடுக்கப்பட்டுளள 5,000mAh பேட்டரி பேக், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை வாய்ஸ் கால் டைமிங்கை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைலில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் டூயல் 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், GPS மற்றும் USB Type-C உள்ளிட்டவை அடக்கம். இந்த் டிவைஸின் மொத்த எடை 187g ஆகும்.