கோவை: மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, இன்று, நம் மாநில வளர்ச்சிக்கு தேவையான கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கழகம் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.