By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என் தாய் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வேன்: கலீதா மகன் உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > என் தாய் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வேன்: கலீதா மகன் உறுதி
உலகம்

என் தாய் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வேன்: கலீதா மகன் உறுதி

Nagaraj
Last updated: January 2, 2026 7:41 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

டாக்கா: எனது தாய் விட்டுச் சென்ற மக்கள் பணியை நான் தொடருவேன் என்று கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு அருகில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கலீதா ஜியாவின் மறைவை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டாக்கா சென்று தாரிக் ரஹ்மானை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாரிக் ரஹ்மான் வெளியிட்டுள்ள சமூக ஊடக செய்தியில், ‘‘எனது அன்புக்குரிய தாயாரும், என் வாழ்வின் முதல் ஆசிரியரும், மூன்று முறை பிரதமராக இருந்தவருமான கலீதா ஜியாவின் உடலை, எனது தந்தையும் நாட்டின் அதிபராக இருந்தவருமான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்தேன். அவர் இல்லாத வெறுமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

எனினும், முன் எப்போதும் இல்லாத அளவிலான நாட்டு மக்களின் அன்பு இந்த கடினமான தருணத்தில் என்னை தனிமையில் தவிக்க விடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், நலம் விரும்பிகள், குடும்பத்தினர், நாட்டு மக்கள் ஆகியோரின் அன்பு மற்றும் மரியாதையால் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தவும், அன்பை வெளிப்படுத்தவும் எங்களுடன் நிற்கவும் ஒன்றுகூடிய விதம் எனக்கு ஒன்றை நினைவூட்டியது. அவர் எனது தாய் மட்டுமல்ல; பல வழிகளில் அவர் முழு தேசத்தின் தாயும் ஆவார்.

எனது தாய் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக அயராது சேவை செய்தார். இன்று நான் அவர் வகித்த பொறுப்பையும் மரபையும் ஆழமாக உணர்கிறேன். அதே ஆழமான பொறுப்புடன் நான் உறுதி அளிக்கிறேன்: தனது கடைசி மூச்சு வரை தனக்கு அன்பும் நம்பிக்கையும் வலிமையும் உத்வேகமும் அளித்த மக்களுக்காக எனது தாய் எவ்வாறு பாடுபட்டாரோ, நானும் அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவரது பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு

போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

சங்க காலத்திலே புகழ்பெற்ற திருக்காஞ்சி தலம்

TAGGED:determinationKhaleda ZiaPublic ServiceResponsibilityServicesonஉறுதிகலீதா ஜியாசேவைபொறுப்புமகன்மக்கள் பணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?