கோவை: ‛‛ பள்ளி கல்வியை முடிக்கும் அனைவரும் திசை மாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை, முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவக்கி வைத்தார்.