சென்னை: பல் போனால் சொல் போச்சு என்பார்கள். புன்னகையுடன் வாழ பற்கள் வேண்டும் அல்லவா. எனவே சரியான முறையில் பற்களை பராமரிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் இருக்கும் பால் பற்கள் விழுந்து மறுபடியும் முளைத்து விடும். டீன் ஏஜ் பருவத்திற்கு பிறகு எதிர்பாராத விபத்துக்களால் பல் உடையலாம். பல் சொத்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்பு அதிகம்.
விளையாட்டுக்களிலும் முகம் தாக்கப்பட்டால் பற்கள் உடையும். தெற்றுப்பற்கள் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பல்லின் மேல் கேப்’ போட்டு மூடுவது, பல் முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கை பற்கள் வைப்பது என ஏராளமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சில நேரம் பல்லில் அடிபட்டு இருந்தாலும் வலி இருக்காது. ஆனால் பல்லின் நிறம் மாற ஆரம்பித்தால் உடனடியாக பல்மருத்துவரை நாடவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பற்களைப் பாதுகாப்போம். புன்னகையோடு வாழ்வோம்.