அனைவருக்கும் முருங்கைக்காய் மிகவும் பிடிக்கும். இரும்புச்சத்து நிறைந்தது. இந்த முருங்கைக்காயில் விதவிதமான உணவுகள் செய்யலாம். அந்த வகையில் சுவையான ருசிமிகுந்த முருங்கை மசாலா செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய் – 4
சின்ன வெங்காயம் – 10
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 1
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடலை எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: முதலில் முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். சின்ன வெங்காயம் சேர்ப்பதால் முருங்கை மசாலா சுவையாக இருக்க உதவும்.
கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் 20 நிமிடத்தில் சுவையான காரசாரமான முருங்கை மசாலா தயார்.