சென்னை: கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. இதனால் விலை குறைந்துள்ளது.
அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்ததால் மூட்டை மூட்டையாக நாசிக் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வந்தது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு குறைந்து வருகிறது. தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம் ரூ.100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் தக்காளியும் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் சந்தோஷத்தில் உள்ளனர்.