பெய்ஜிங்: அதிவேக ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் பணியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்காக 2 கி.மீ. இந்நிலையில், சமீபத்தில் இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த அதிவேக ரயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் உராய்வு இல்லாததால், விமானம் செல்லும் வேகத்தில் இந்த ரயிலும் பயணிக்கும் என கூறப்படுகிறது.
தற்போது 2 கி.மீ., துாரத்தில் சோதனை ஓட்டத்தில் எதிர்பார்த்த வேகத்தை ரயில் எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷான்சி மாகாண அரசும், சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் கழகமும் இணைந்து அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கும் ஷாங்காய்க்கும் இடையிலான 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள, மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் வரை 4.18 மணி நேரத்தில் பயணிக்க முடியும்.