தஞ்சாவூர்: அனல் கிளப்பும் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் வெகு மும்முரமாக தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் அதிரடி கிளப்பி வருகிறார்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மேயர் சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது தமிழக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகள் மற்றும் தான் மேயராக இருந்த போது தஞ்சை மாநகராட்சி மேம்பாட்டிற்காக செய்த சாதனைகளை மக்களுக்கு விளக்கி கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாத நிலையை ஏற்படுத்துவதற்காக கடந்த 30.04.2022 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் 1400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி செய்தது. தஞ்சை மாநகரில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மாநகராட்சியில் 04.06.2022 அன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் கொண்டு வரும் மக்கும் குப்பையிலிருந்து கிடைக்கும் உரத்தை விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை தூய்மை பணியாளர்களுக்கே ஊக்கத்தொகையாக 04.06.2022 அன்று முதல் வழங்கப்பட்டது. சாலையோரங்களில் படியும் மண்களை எளிமையான வகையிலும் உடனடியாகவும் அகற்றுவதற்கும் 28.06.2022 அன்று தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.66 இலட்சம் மதிப்பில் வாகனம் வாங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உள் சூரிய ஒளி சக்தி அமைக்கப்பட்டு அதன் மூலம் நாள்தோறும் 3 மெகாவாட் மின் உற்பத்தி 01.08.2022 அன்று துவங்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கி வருவது. கடந்த நான்கரை ஆண்டுகளில், சரித்திரம் பேசும் வகையில் எண்ணற்ற சாதனைகளை திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்தியுள்ளது.
‘நாள்தோறும் நலத்திட்டங்கள்’ என்பதோடு, தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘மனிதா்களின் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள்’ என்றவாறு சொல்லாமல் நிறைவேற்றிய சாதனைகளும் ஏராளம். திமுக அரசின் சாதனைகள் என்பது அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியைப் பெற்ற சாதனையாகவே இருக்கிறது.
குறுகிய காலத்திலேயே, கரோனா பேரிடரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே சாதனைகளைப் படைத்த சரித்திரம் போற்றும் அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு மக்களின் மனம் கவா்ந்த அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று பொதுமக்களிடம் அரசின் சாதனைகளையும் விளக்கி கூறி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வாக்கு சேகரித்து வருகிறார். வாக்கு சேகரிக்க திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். காலையில் ொடங்கி இரவு வரை ஓய்வின்றி அதிரடியாக அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பிலும், பிரச்சாரத்திலும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல் வல்லம் பேரூராட்சிக்குட்ட பகுதிகளிலும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.