தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1 (உரித்து நறுக்கியது)
முட்டை – 4
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லிகைப் பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி – 1 கைப்பிடி
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அதன் பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கி மூடி வைத்து 8 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
பீர்க்கங்கரி நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால் பீர்க்கங்கரி முட்டை பொரியல் ரெடி!!!