சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பனங்கிழங்கில் பாயசம் செய்து சாப்பிடுங்கள். ருசியும் பிரமாதமாக இருக்கும்.
தேவையானவை: பனங்கிழங்கு – 4, தேங்காய்ப்பால் – ஒரு கப், பனை வெல்லக் கரைசல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தலா 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி – திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.