மியான்மர்: மியான்மர் நாட்டில் இருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்காளதேச நாட்டுக்கு தப்பி செல்கின்றனர். 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக தப்பி செனறுள்ளனர். இந்நிலையில், எல்லை பகுதியில் தப்பி செல்வதற்காக முயன்ற அகதிகளில் பலர் டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். தப்பி வந்த முகமது எலியாஸ் 35) குடும்பத்தினருடன், கடற்கரையோரம் நின்றிருந்தபோது நடந்த தாக்குதலில் அவருடைய கர்ப்பிணியான மனைவியும், 2 வயது மகளும் படுகாயமடைந்தனர். எனினும், பின்னர் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என கூறியுள்ளார்.