சென்னை: மாங்காயில் பல விதமான ரெசிபிகள் செய்யலாம். இன்று நாம் எளிதான மற்றும் உடனடியாக செய்யக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்
மாங்காய் – 1
வெல்லம் – 2 கிராம்
தாளிக்க
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உளுந்து – சிறிதளவு
மிளகாய் தூள் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை: மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்த வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும். இப்போது, நமக்கு மாங்காய் பச்சடி தயார். குறிப்பாக, புளிப்பும் இனிப்பும் கலந்திருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.