சென்னை: வி.சி.க., மீது விமர்சனம் செய்த, தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு குபேந்திரன், மயிலாடுதுறை டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனு:
முகநுால், எக்ஸ் தளத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா, நான் சார்ந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, எங்கள் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் மற்றும் தமிழகத்தை ஆளும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளைப் பற்றி இழிவாக, பதிவு செய்து உள்ளார்.
இந்த பதிவை வெளியிட்டு பெண்மையை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அமைதி இன்மையை ஏற்படுத்தும் உள்நோக்கிலும் இந்த பதிவை செய்துள்ளார். எனவே, ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.