புதுடில்லி: அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இந்த விழாவில் தொலைப்பேசி வாயிலாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ” அனைவருக்கும் வணக்கம். பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது நெருங்கிய நண்பர். அமெரிக்கத் தேசம் புதிய சாதனைகளைப் பதிவு செய்து வருகிறது. அது பொருளாதாரம், பங்குச் சந்தை என விரிவடைந்துள்ளது.
என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம். அதே போல, எங்கள் தேசத்தையும் முழுமையாக நம்பலாம். தங்களுக்கு உதவி தேவையெனில் தொடர்பு கொள்ள வேண்டும்? என அவர்கள் அறிவார்கள் ” எனப் பேசினார்.
அமெரிக்காவின் 250 வது சுதந்திர தினம், அந்நாட்டில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொண்டாடத்தினை நெறிப்படுத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.