By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
அரசியல் செய்திகள்

குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Nagaraj
Last updated: May 26, 2026 7:03 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சிறு விவசாயிகளுக்கும் தனித்தனி அளவுகளில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முக்கிய நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் என். மரிய வில்சன் உள்ளிட்ட அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 28.11.2025 அன்று வெளியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் பரிசீலிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை, நிதி ஆதாரங்கள் மற்றும் விவசாயிகளின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ரூ. 50,000 வரை பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி: அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும், அதாவது 100 சதவீத கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.40,000 தள்ளுபடி ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.30,000 தள்ளுபடி ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும்.

அதேபோல், சிறு விவசாயிகளுக்கும் தனித்தனி அளவுகளில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மாம்பழங்களுக்கு ஆதார விலை வேண்டும்

பட்ஜெட்டுக்கு முன் அதிரடி ஆலோசனை! ஜூலை 2 முதல் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தவெக அரசின் மகளிர் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு புள்ளிவிவரங்கள்

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

TAGGED:Agriculture ReliefCooperative BanksCrop Loan WaiverFarm LoanfarmersSmall farmersTamil Nadu Governmentகடன் தள்ளுபடிகுறு விவசாயிகள்கூட்டுறவு வங்கிதமிழக அரசுபயிர்க்கடன்விவசாய நிவாரணம்விவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?