சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பெண்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 30 நாட்களில் போதைப்பொருளுக்கு எதிராக 473 வழக்குகள் பதியப்பட்டு 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ மூலம் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.