சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ என பெயரிடப்பட்டுள்ளது.
கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படத்தின் அறிமுக மோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்படத்தை இயக்குகிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
1985-ல் கமல்ஹாசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் அதே தலைப்பு தற்போது பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
