சென்னை: கலையரசன், கயல் ஆனந்தி இணைந்து நடித்துள்ள ‘டைட்டானிக்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை வெளியீடு தள்ளிப்போன இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
முதலில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் அக்டோபர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பருவக் காதல், நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை மையமாகக் கொண்ட படமாக இது உருவாகியுள்ளதாகப் படக்குழு கூறியுள்ளது. பல ஆண்டுகளாகப் படத்தை உருவாக்க உழைத்ததாகவும், ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகவுள்ள மற்ற திரைப்படங்களுடன் ‘டைட்டானிக்’ படமும் போட்டியிட உள்ளதால், திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
