சென்னை: நடிகர் சாய் துர்கா தேஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘சம்பராலா எடிகட்டு’ திரைப்படம் 2027 ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரோஹித் கே.பி. இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஹனுமான்’ படத்தை தயாரித்த கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பீரியட் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
