சென்னை: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் 13 பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் நேற்று வெளியானது. கடந்த ஆண்டே வெளியாக இருந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
